தூய சவேரியார் ஆலயம், இரத்தினபுரம், தூத்துக்குடியில் விவிலிய விழா கண்காட்சி நிகழ்வில் விவிலிய நிகழ்ச்சிகள் அனைத்தும் பொருத்தமான படங்களோடு பார்வையாளர்களுக்கு நடித்துக் காட்டப்பட்டன. பின்வரும் பதிவுகளில் நீங்கள் தொடர்ந்து அனைத்தையும் கண்டுகளிக்கலாம்.
கானாவூர் திருமணவிழாவில் புதுமை
நடாத்தியவர்கள்: ஆர். சி. பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர்கள்
கலிலேயாவிலுள்ள கானாவூரில் நடந்த திருமணவிழாவிற்கு இயேசுவும் அவரது அன்னை மரியாவும் அழைக்கப்பட்டிருந்தனர். திராட்சை இரசம் குறைவுபட, தாய் மரியா தன் மகனைக் கேட்க, தனது நேரம் இன்னும் வரவில்லை என உரைத்தபின்பும் இங்கே தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய அற்புத்த்தினை செய்து காட்டுகிறார் இயேசு (யோ 2: 1-11). இசைக் கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை இசைக்க, மணமக்கள் மகிழ்வுடன் வீற்றிருக்க, இயேசு, தாய் மற்றும் சீடரோடு அமர்ந்திருக்க பந்தி மட்டும் தயாராயிருந்தது. பின்பு வந்து இயேசு ஆறு கற்சாடிகளில் நிரப்ப்ப்பட்டிருந்த தண்ணீரை ஆசீர்வதிக்க அவை திராட்சை இரசமாக மாறியபின் நான் கிளிக்கிய காட்சி.
இயேசு கோவிலைத் தூய்மை செய்தல்
நடாத்தியவர்கள்: ஆர். சி. பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள்
பாஸ்கா நெருங்குகையில் தன் சீடருடன் யெருசலேம் சென்ற இயேசு அங்கு கோவிலில் ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், நாணய மாற்றுபவரையும் கண்டு `என் தந்தையின் வீடு ஜெப வீடு என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்களோ இதனைக் கள்வர் குகையாக்கினீர்கள்’ எனக் கூறி, கயிறுகளால் ஆன சாட்டை பின்னி அவர்களை அடித்துத் துரத்தத் தொடங்கினார். நாணய மாற்றுவோரின் பலகைகளையும் கவிழ்த்துப் போட்டார். இந்நிகழ்ச்சி மூலம் சீடர் `உமது இல்லத்தின் மீதான ஆர்வம் என்னை எரித்து விடும்’ என்ற வேத வாக்கினை நினைவு கூர்ந்தனர் (யோ 2: 14-17).
கானாவூர் திருமணவிழாவில் புதுமை
நடாத்தியவர்கள்: ஆர். சி. பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர்கள்
கலிலேயாவிலுள்ள கானாவூரில் நடந்த திருமணவிழாவிற்கு இயேசுவும் அவரது அன்னை மரியாவும் அழைக்கப்பட்டிருந்தனர். திராட்சை இரசம் குறைவுபட, தாய் மரியா தன் மகனைக் கேட்க, தனது நேரம் இன்னும் வரவில்லை என உரைத்தபின்பும் இங்கே தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய அற்புத்த்தினை செய்து காட்டுகிறார் இயேசு (யோ 2: 1-11). இசைக் கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை இசைக்க, மணமக்கள் மகிழ்வுடன் வீற்றிருக்க, இயேசு, தாய் மற்றும் சீடரோடு அமர்ந்திருக்க பந்தி மட்டும் தயாராயிருந்தது. பின்பு வந்து இயேசு ஆறு கற்சாடிகளில் நிரப்ப்ப்பட்டிருந்த தண்ணீரை ஆசீர்வதிக்க அவை திராட்சை இரசமாக மாறியபின் நான் கிளிக்கிய காட்சி.
திருமுழுக்கு யோவானின் மரணம்
நடாத்தியவர்கள்: ஆர். சி. பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள்
ஏரோது அவனது சகோதரன் மனைவி ஏரோதியாளைத் தன் மனைவியாகக் கொண்டிருந்தான். திருமுழுக்கு யோவான் இது தவறெனக் கண்டித்தார். இதன்பொருட்டு அவரைக் கொலை செய்ய ஏரோதியாள் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தாள். அந்த வாய்ப்பும் வந்தது. ஏரோது தனது பிறந்தநாள் விழாவில் பெருங்குடி மக்களுக்கு அளித்த விருந்தில் ஏரோதியாளின் மகள் ஆடி விருந்தினரை மகிழ்வித்தாள். அவளிடம் ஏரோது `நீ என்ன கேட்டாலும் தருகிறேன். அது என் அரசில் பாதியானாலும் சரி’ என்றான். தன் தாய் விருப்பப்படி யோவான் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடும் என்றாள். விருந்தினர்பொருட்டு தன் வாக்ககைக் காப்பாற்ற தம் காவலருக்கு ஏரோது கட்டளையிட கொலைஞனை அனுப்பி யோவான் தலையை வெட்டி தட்டில் வைத்துக் கொடுக்க அவள் தன் தாயிடம் அதனைக் கொண்டு சென்றாள் (மாற்கு 6: 16 – 23).
செம்மறியானவர் ஏழு முத்திரைகளை உடைத்தல்
நடாத்தியவர்கள்: அன்னை தெரசா அன்பிய இறைமக்கள்
தி.வெ. 6 – 8 அரியனணயின்மீது முத்திரையுடன் வைக்கப்பட்டிருந்த ஏழு ஏட்டுச் சுருள்களையும் பிரிக்க அதிகாரம் கொண்ட தேவ ஆட்டுக்குட்டி நான்கு மிருகங்கள் மற்றும் 24 மூப்பர்களின் நடுவில் சென்று அரியனணயில் அமர்ந்து அந்த ஏட்டுச் சுருளைக் கையில் எடுத்தவுடன் சூழ இருந்த யாவரும் தெண்டனிட்டு வணங்க `ஏட்டுச் சுருளைப் பிரிக்க அதிகாரம் உள்ளவர் நீர் ஒருவரே’ என்ற விண்ணவர் பாடல் விண்ணகத்தில் ஒலித்த்து. செம்மறியானவர் ஏழு முத்திரைகளையும் உடைத்த காட்சி.
இயேசு முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கல்
நடாத்தியவர்கள்: ஆர். சி. பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள்
முடக்குவாதமுற்றவர் ஒருவரைக் கட்டிலோடு நால்வர் சுமந்து வந்து இயேசு போதித்துக் கொண்டிருந்த வீட்டில் இடம் போதாமையால் அவ்வீட்டின் மேற்கூரையைப் பிரித்து கட்டிலோடு அவரை இறக்கினர். இயேசு அவர்களுடைய விசுவாசத்தினைக் கண்டு திமிர்வாதக்கார்ரை நோக்கி ` `திடன்கொள். மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன்’ என்றார் (மத் 9:2).
மோசே பத்துக் கட்டளைகள் பெறல்
நடாத்தியவர்கள்: இயேசு நேசிக்கிறார் அன்பிய இறைமக்கள்
மோசே சீனாய் மலையில் நாற்பது நாள் இரவு, பகலாக உண்ணாமலும், குடியாமலும் `யாவே’ கடவுளோடு (வி.ப 34: 28) தங்கியிருந்த பின் அவரிடமிருந்து பெற்ற பத்துக் கட்டளைகள் அடங்கிய கற்பலகைகளோடு அமர்ந்திருந்த காட்சி.
இஸ்ரயேலர் செங்கடலைக் கடத்தல்
நடாத்தியவர்கள்: தூய அந்தோணியார் அன்பிய இறைமக்கள்
கடவுள் அந்த இரவு முழுவதும் மிக பலத்த கீழைக் காற்றை வீசச் செய்து கடல் வற்றிப் போகும்படி செய்தார். மீதமிருந்த தண்ணீர் இருபுறமும் மதிலைப் போல் நிற்க மோசே தலைமையில் இஸ்ராயேலர் கால் நனையாமல் செங்கடலைக் கடந்த (வி.ப 14: 21,22) காட்சி.
மலைப்பொழிவு
நடாத்தியவர்கள்: அருட்கன்னியர் மற்றும் மறைக்கல்வி மலர்கள்
அங்குத் திரண்டிருந்த பெருந்திரளான மக்களைக் கண்டு சீடர்கள் புடைசூழ இயேசு மலை மீது ஏறி அமர்ந்து போதிக்கலானார். ஏழையரின் உள்ளத்தவர் பேறுபெற்றோர் ஏனெனில், விண்ணகம் அவர்களது உரிமையாகும். துயருறுவோர் பேறுபெற்றோர் ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர். நீதியின்பால் பசி, தாகம் உள்ளோர் பேறுபெற்றோர் ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர். தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதியை நிலைநாட்டுவோர் பேறுபெற்றோர் ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர் ஏனெனில், அவர்கள் வான்வீட்டை உரிமையாக்கிக் கொள்வர் (மத் 5: 3 – 10).
0 comments:
Post a Comment