Thursday, August 11, 2011

மனமெனும் பேய்



மானுட மையமிது
உணர்வென்பார், உருவென்பார் கண்டவரிலை இதை.
நன்றும், தீதும் இதனால்.
எவர் கற்பித்தார் இம் மழலையர்க்கு
தன்னுடைமை பிறர் கொண்டால் கோபம் கொள்
இன்னா செய்த(வரை)தை ஊறு செய்
பிறருடைமை கேள்;
அறியாப் பருவமென்பார்.
வழி வழிப் பதிவென்பார், விதியென்பார்
மீறியவர் யார்?
கடினமிந்த கடல், கரை கண்டார் யார் யாரே?

0 comments:

Post a Comment