ஜென் ஞானம் ஒர் உயர்ந்த ஆன்மீகம். யதார்த்தத்தில் இறைமையை உணர வைக்கும் ஒர் உன்னத வழி. அனுபவமே பயணத்தின் பாதை. இந்த ஜென் கதை பதிவுகள் தொடர்ந்து படிக்கவும், அனுபவம் மூலம் அந்த இறைமையை நமதாக்கிக் கொள்ளவும் உதவும் என நம்புகிறேன்.
தளபதி ஒருவர் ஜென் துறவியிடம் சீடராக சேர்ந்தார். நாள்தோறும் ஜென் ஞானததைப் பற்றிய போதனனகளைக் கேட்டு வந்த அவர் ஓர் நாள் தம் குருவிடம் `குருவே! சொர்க்கம், நரகம் இவற்றைப் பற்றி அறிய விரும்புகிறேன். தாங்கள் தயவு கூர்ந்து விளக்க வேண்டும்' என்றார். குரு அவரிடம் `இது கூட தெரியாத நீ ஒரு முட்டாள்' என்றார். இதைக் கேட்ட தளபதி கோபம் தலைக்கேறியவராய் தன் வாளை உருவினார். உடன் குரு `இப்போது நீ நரகத்தின் வாயிலில் நிற்கிறாய்' என்றார். தன் தவறை உணர்ந்த தளபதி `என்னன மன்னித்து விடுங்கள்' என்று தலை தாழ்ந்தார். அப்போது குரு `இப்போது நீ சொர்க்கத்தின் வாயிலில் நிற்கிறாய்' என்றார்.
சொர்க்கமும், நரகமும் மதங்கள் போதிப்பது போல் ஒர் இடம் அல்ல என்பது ஜென் பாடம். சக மனிதர், உயிர்கள் மற்றும் ஜடப் பொருட்களை மதிக்கும் ஒர் உயரிய பண்பே அதனைத் தீர்மானிக்கும் காரணி என்று விளக்குகிறது மேற்கண்ட கதை.
தொடரும்...

0 comments:
Post a Comment