Monday, August 22, 2011

எது முறை?


தன் வாழ்நாள் முழுவதும் கொலை, கொள்ளை என பிறரைத் துன்புறுத்தியே வாழ்ந்த மனிதன் ஒருவன் திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற வேட்கையில் புத்தரை நாடி அவர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தான். அவன் வந்த வேளை புத்தர் பிட்சை வாங்குவதற்காக ஊருக்குள் சென்றிருந்தார். அப்போது மடத்திலிருந்த சாரி புத்ரர், புத்தரின் சீடர் அம்மனிதனை அழைத்து அவன் வந்த நோக்கத்தைத் தெரிந்து கொண்டார். பின்பு அவனுடைய ஜாதகத்தைக் கணித்து `நீ இப்பிறவியில் இதுநாள்வரை பிறருக்கு பெருந்துன்பங்களையே செய்து வந்திருக்கிறாய். உன் ஜாதகப் பலனின் படி உன்னால் இனி திருந்த முடியாது. நீ போகலாம்' என்றார்.

இதைக் கேட்டு மனம் உடைந்த அம்முரடன் `கோ'வென கதறி அழுதனன். இனி எதற்காக இந்த உலகில் வாழ வேண்டும். இந்த பாவிக்கு இனி மன்னிப்பே கிடையாது என்று புலம்பியவனாய் தன் தலையை மடத்தின் சுவற்றில் முட்டியே தன்னன மாய்த்துக் கொள்ள போனான். அவ்வமயம் வெளியே பிட்சைக்குச் சென்றிருந்த புத்தர் திரும்பி வந்தார். அங்கு மடத்தின் வாயிலில் முகத்தில் இரத்த்க் கோரையுடன் துயரத்தில் ஆழ்ந்திருந்த அம்மனிதனனக் கண்டார். சாரிபுத்ரர் வாயிலாக நடந்தது அனனத்தையும் கேட்டரறிந்து அவனை அன்பொழுக அனணத்து மடத்தின் உள்ளே அழைத்துப் போனார். சிறிது நாட்கள் தன்னுடன் தங்க வைத்தார். புத்தரின் கருனணயினால் அம்முரட்டு மனிதன் மனப்பக்குவம் பெற்று ஒரு புத்த பிட்சு ஆகும் அளவுக்குத் தகுதி பெற்றான்.

இதை அவதானித்துக் கொண்டிருந்த சாரிபுத்ரர் ஆச்சரியம் அடைந்தவராய் புத்தரிடம் சென்று `இத் எப்படி சாத்தியம்? அவன் ஜாதகத்தின்படி அவன் திருந்த வாய்ப்பே இல்லையே' என்று கேட்டார். புத்தர் சொன்னார் "சாரிபுத்ரா நீ நல்லவன். ஆனால் உனக்குப் போதுமான கருனணயில்லை. மிக உயர்ந்த ஞானமில்லை. பாவங்களின் சுமை உனக்குத் தெரியாது. ஜாதகத்தின் மூலம் நீ அறிந்த அவனுடைய இறந்த காலம் எதற்கு ஆகும்? எதிர்காலத்தை அல்லவா உருவாக்க வேண்டும்.இறந்த காலத்திலிருந்து விடுபட இவன் தவித்த தவிப்பு எப்படிப்பட்டது தெரியுமா? அந்த தவிப்புதான் இவனுக்கு விடுதலை பெற்றுத் தந்தது" என்றார். பாவத்துக்குப் பரிகாரத்தை விட திருந்த நினனக்கும் தவிப்பே முக்கியம் என்பது புத்தர் அறிவுறுத்தியது.

இதையொத்த சம்பவம் விவிலியத்தில் காணக் கிடக்கிறது. வருடங்கள் பலவாக நோயினால் பீடிக்கப்பட்டு, வறுமையில் வாடி, படுக்கையிலே தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைத் தான் செல்லும் வழியில் கண்டு அவர்மேல் மனதுருகி குணமாக்கினார் இயேசுநாதர். இதைப் பொறுக்காத யூத மத குருக்கள் சிலர், தங்களை சமூகத்தின் பார்வையில் ஆன்மீகவாதிகள் எனக் காட்டிக் கொண்டு வந்த இவர்கள் ஒய்வு நாளில் இவ்வாறு செய்வது முறையா? எனக் கேட்டு அவர் மேல் பாய்ந்தனர். அந்நாளில் யூத மதச் சட்டத்தின்படி ஓய்வு நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது. இது அவர்கள் `யாவே' கடவுள் மோயீசன் வழியாகக் கொடுத்த கட்டளை. ஆனால் இயேசு தாம் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் இதே சட்டத்திற்கு புதியதொரு புரிதலைக் கொடுத்தார். அதாவது ஒய்வு நாளில் நன்மை செய்வது முறையே என்று.

உண்மையான உந்துதல், தன்னார்வம், பழைய பாவ சேற்றிலிருந்து எழுந்து புதிய பரிணாமம் பெற ஆசை இவை இருந்தால் அங்கு சட்டத்திற்கு இடமில்லை. அவர் எந்நிலையிலும் மனம் மாறி புதிய வாழ்வைத் தொடங்கலாம், தொடரலாம் என்பது பரமனின் அழைப்பு.

0 comments:

Post a Comment