Thursday, September 8, 2011

நல்லாசிரியர் ஒர் சமூக சிற்பி



எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார் இவ்வையத்தில்
கற்றதனன, கற்பிப்போ ரெவரும் கற்பவரே
காலமெனும் ஒடமதில் நினனவதினில் நீங்காதவரே
நித்தமவர்தனன எதிர்நோக்கும் மழலையர் விழிகள்
மாறாத வரென்பெனில் தாயுமானவரே யவர்.

கூர்புலச் செவியதனன சாய்ப்பார் சேயானவர்க்கே
வினவுவர் வினாவது உற்றறிவுக் கொவ்வாதாயினும்
பொறுமை கடலினும் பெரிதெனப் போற்றுவார்.

தனக்குவமை இல்லாதான் தாள் பணிப்
பெரும் எண்ணங்கள் பேணுவார் பேறென்று
கருணன யுள்ளம் காக்கும் கரமென
தன்னலம் கருதாத் தகைமை கொண்டார்.

எழில்சார் இருப்பவர் அறிவொளி தனன
அள்ளக் குறையா அமுதென் வாரிக் கொடுப்பவர்
நேர்மறைச் சிந்தைவழி ஆக்கமென் பழமையன்றி
புதுமை புகும் புண்ணிய வேள்வியதை
இருமை நீக்கும் பகலவனாய்ப் பாரினில்
பட்டொளி வீசப் பணிசெய்வார் குருவெனவே.

இடர்பல ஈங்கு வந்திடினும் இதயத்தாலே
தாங்குகின்றார் கலங்கரை விளக்கவர் காரிருள்
நீக்குவார். செப்புவார் பலர் இவரென்
பள்ளி ஆசிரியரென், விரும்பாரதை
பீடுகொள்வார் மாணாக்கன் ஒங்குபுகழ் காண.

உளி கொண் டுடைப்பார் கல்லதை
கடும் பாறை கண்கவர் சிற்பமாமே;
அதேபோல் கற்பவரிங்கே களிப்பெய் தம்முடைமை
பகிர்செய் நல்லாசிரியரும் சிற்பிதாமே.

நல்லா ரெவரும் உத்தம ரவரை
நாளும் நினனந் தேற்றி நலமே
வாழ வழிசெய் வாழ்த்தி வணங்குவமே.

0 comments:

Post a Comment