Thursday, September 8, 2011
அக்கரையில்...
இளம் ஜென் துறவியர் இருவர் உணவு வாங்க ஊருக்குள் சென்றனர். மடத்திற்கும், அவ்வூருக்கும் இடையில் ஆறு ஒன்று ஒடிக் கொண்டிருந்தது. வருடத்தில் ஒரிருமுறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும். இவ்வமயம் அதேபோல் தண்ணீர் பெருக்கெடுத்து பிரவாகமாய் ஒடிக்கொண்டிருந்தது. அத்துறவியர் ஆற்றைக் கடக்க எத்தணிக்கையில் இளம்பெண் ஒருத்தியும் கரையோரம் வந்து நின்றாள். ஆற்று வெள்ளத்தினனக் கடக்க அவளுக்கு துணிவில்லை. தயங்கியபடி நின்றிருந்தாள். உடன் இரு துறவியரில் ஒருவர் அவளிடம் சென்று ஏனம்மா இங்கு நின்று கொண்டிருக்கிறாய்? ஆற்றைக் கடக்க பயமா? எனக் கேட்டார். அந்த இளம்பெண்ணும் ஆமாம் எனக் கூறி தன்னன அக்கரையில் சேர்க்கும்படி மன்றாடினாள். அந்தத் துறவியும் அவளைத் தன் தோளில் சுமந்து அக்கரையில் கொண்டு விட்டார். அவளும் நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டகன்றாள்.
உணவு வாங்கிவிட்டு மடத்திற்குத் திரும்பும் வழியில் மற்றோர் துறவி இளம்பெண்ணுக்கு உதவி செய்த துறவியிடம் புத்த மதக் கொள்கைப்படி துறவி பெண்ணைத் தொடலாமா? எனக் கேட்டார். உதவி செய்த கணத்திலிருந்தே தம் மனதில் இதே கேள்வியுடன் தன்னுடன் வந்து கொண்டிருந்த சக துறவியிடம் `நம் மத கொள்கையின்படி பெண்னணத் தொடுவது குற்றம்தான். ஆனால் அப்பெண் இருந்த சூழலில் நாம் உதவியது தவறல்ல. மேலும் நான் அப்பெண்னண அப்போதே அக்கரையில் இறக்கி விட்டுவிட்டேன். நீர்தான் இன்னும் அவளை மனதில் சுமந்து கொண்டிருக்கிறீர்' என்றார்.
Labels:
ஆன்மீகம்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment