Wednesday, July 25, 2012

இரசித்த ஹைக்கூ கவிதைகள்


லட்சம் கொடுத்து
வேலையில் சேர்ந்தான்
இலஞ்ச ஒழிப்பு இலாகா.

வெளிச்சமில்லை
ஊர் பெயர் மட்டும்
ஆயிரம் விளக்கு.

அன்பு இல்லம்
வாசலில்
நாய்கள் ஜாக்கிரதை.

 
சுகாதார அலுவலகம்
சுவற்றைச் சுற்றி
சிறுநீர்த் தடயங்கள்.

அறுவடைக்குக் காத்திருக்கும்
விவசாய நிலங்கள்
வீட்டுமனை விற்பனை.

சர்க்கரை ஆலையில்
கசப்பான உண்மை
குறைந்த சம்பளம்

சுற்றிலும் முட்கள்
சிரிப்பதை நிறுத்தவேயில்லை
பூ.

சோளக்காட்டில்
வேட்டி சட்டையோடு பொம்மை
ஆடு மேய்க்கும் அம்மணச் சிறுவன்.

காட்டை அழித்துக்
கட்டினார்கள்
மழை ஆராய்ச்சிக்கூடம்.

சுதந்திரம் என்பது பிறப்புரிமை
இங்கு பிறப்பதற்கே உரிமையில்லை
பெண்கள். (விடியல்)



0 comments:

Post a Comment