Saturday, September 3, 2011

அப்படியா!

ஒரு ஊரில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவ்வூரிலேயே இளம்பெண் ஒருத்தி தன் குடும்பத்தினருடன் குடியேறினார். எளிய மக்கள் எல்லாரும் அன்பு பாராட்டி ஒன்று கூடி தம்முடையதை அயலாருடன் பகிர்ந்து நல் வாழ்வுக்கு இலக்கணமாக திகழ்ந்து வந்தனர். இவ்வமையத்தில் அந்த இளம்பெண் கருவுற்றிருப்பது தெரிய வந்தது. அவளது வீட்டார் இந்த கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? எனக் கேட்டு அவளை நிர்ப்பந்தித்து வந்தனர். அவளும் அவர்களின் தொடர் வற்ப்புறுத்தலைத் தாங்க மாட்டாமல் இதற்கு காரணம் அந்த துறவிதான் என்று அறிவித்தாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவள் குடும்பத்தாரும், உறவினர்களும், ஊராரும் அத்துறவியின் குடிசைக்குச் சென்று வாய்க்கு வந்தபடி அவரைத் திட்டினர். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு `அப்படியா? என்றார். நாட்கள் நகர்ந்தன. அப்பெண் ஒரு அழகிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவள் பெற்றோர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டு போய் துறவியிடம் கொடுத்து `நீர் தான் இந்தக் குழந்தையை வளர்க்க வேண்டும்' என்று ஒப்படைத்தனர். `அப்படியா? எனக் கேட்டு அந்தக் குழந்தையைக் கரங்களில் எடுத்து அதை வளர்த்து வரலானார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் குழந்தையும் வளர்ந்து வந்தது. அந்தப் பிள்ளையைக் கானும்போதெல்லாம் அதன் தாயான அந்த இளம்பெண் மன உறுத்தலால் வேதனைப்பட்டாள். முடிவில் அவள் தாய், தகப்பனிடம் தவறு செய்தது அந்தத் துறவியல்ல, அதே ஊரில் இருக்கும் ஒர் இளைஞன் என்ற உண்மையைக் கூறினாள். இதைக் கேட்ட அவள் பெற்றோர் மிகவும் மனம் வருந்தி அந்தத் துறவியிடம் சென்று நடந்ததை அறிவித்து தங்களை மன்னிக்க வேண்டினர். குழந்தையையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டினர். துறவியும் `அப்படியா' எனக் கூறி குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.

0 comments:

Post a Comment